ஆயிரமாயிரமாய் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்று வரை தெரியவில்லை.
COLOMBO, SRI LANKA, May 21, 2025 /
EINPresswire.com/ --
2009.மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்களம் நடத்திய இனவெறியாட்டத்தின் நினைவு நாள்.
உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் மனதில் வடுவாய் பதிந்து விட்ட இனவழிப்பின் துயர நினைவுகளை தமிழ்மக்கள்.ஒருங்கிணைந்து நினைவுகூரும் நாள்.
2009 இல். இறுதி யுத்த காலப்பகுதியில் சிங்களப் படையால் நடத்தப்பட்ட கொடுமைகள் மனித குல வரலாறு வெட்கித் தலைகுனிய வேண்டியவை. இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகில் எந்த பகுதியிலும்.நடந்திராத பெரும் மானுட இயற்கை அழிப்பை சிறிலங்கா அரச படைகள் தமிழீழ மண்ணில் நடத்தி முடித்திருந்தன.
ஆயிரமாயிரமாய் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்று வரை தெரியவில்லை.பெரும் குண்டுகள் பொழிந்தும் துப்பாக்கி குண்டுகளால் துளைத்தும் எங்கள் மக்கள் கொல்லப்பட்டனர். நடந்தவர்கள் மீதும், படுத்திருந்தவர்கள் மீதும், ஓடியவர்கள் மீதும், ஒழித்து இருந்தவர்கள் மீதும் கலைத்துக் கலைத்து சிறிலங்காவின் அரச படை கொடும் மனித வேட்டையை நிகழ்த்தியது.
இவ்வளவு நடந்த பின்னும் இலங்கையில் இனவழிப்பே நடக்கவில்லை என்று சிங்கள இனவாத அரசுகள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
இனவாதமற்றவர்கள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்கின்ற தற்போதைய. JVP/NPP ஆட்சியாளர்களும் இன அழிப்பு எதுவும் நடைபெறவில்லை என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் நடைபெற்று முடிந்த இன அழிப்பில் சிறீலங்காவின் இன்றைய ஆட்சியாளர்களின் கரங்களும் இருக்கின்றன என்பதும், அவர்களின் கரங்களில் உள்ள தமிழர்களின் இரத்தக்கறையை அவர்கள் என்றும் வரலாற்றில் மறைக்க முடியாது என்றும்,
இன்றைய தேசிய துக்க நினைவு நாளில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். உலகமெங்கும் பரந்து வாழுகின்ற தமிழ் மக்களுடைய உணர்வுகளுடன் இணைந்து நின்று தமிழீழ தேசிய துக்க நாளை நினைவுகூருகிற அதேவேளை முள்ளிவாய்க்கால் இன அழிப்பில்.தமது உயிரை ஈகம் செய்த.அனைத்துத் தமிழ் மக்களுக்கும் நாம் தலை வணங்கி எமது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எதிர்கால துயரங்களைத் தடுக்க, எதிர்கால இனவழிப்பை தடுக்க, வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும், மறுக்கப்படக்கூடாது; அழிக்கப்படக்கூடாது. மறைக்கப்படக் கூடாது. இதற்கு முள்ளிவாய்க்கால் இளவழிப்பை நினைவுகூரும் நினைவு உரைகள், நினைவுச் சின்னங்கள் அவசியமானவை.
இது தொடர்பாக கனடா பிரம்டனில் அமைக்கப்பட்டுள்ள தமிழினவழிப்பினை நினைவுகூரும் நினைவுச்சின்னத்தை கட்டுவதற்கு தலைமை தாங்கிய மேயர் பேட்ரிக் பிரவுனை நான் வாழ்த்த விரும்புகிறேன்.
கனேடிய தமிழர் தேசிய பேரவை மற்றும் பிராம்டன் தமிழ் சங்கத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் நான் பாராட்டுகிறேன். இந்த நினைவுச் சின்னம்,தமிழ் இனவழிப்பில் உயிரழந்தவர்களையும், உயிர் பிழைத்தவர்களையும் கௌரவிக்கும் அதே வேளையில், சர்வதேச சமூகமும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் இனவழிப்பு செய்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓய மாட்டார்கள் என்ற செய்தியையும் சிறிலங்கா அரசுக்கு அனுப்புகிறது
அன்பான மக்களே,
இனவழிப்பு வரலாறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இன அழிப்பை ஒத்த நிகழ்வுகள் வரலாற்றில் முடிந்த பாடில்லை. அவை தொடரந்து கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிகழ்வுகளை பார்க்கின் றபோது, காஸா பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகள், நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவுகளை, முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தவற்றை நமக்கு நினைவு படுத்துகின்றன.
மார்ச் 27இ 2024 அன்று, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் அறிக்கையொன்றை வெளியிட்டார்.
இவ் அஅறிக்கையில் மூன்று செயல்களின் அடிப்படையில், இனவழிப்பு சாசனத்தின்படி "காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனவழிப்பு செயல்கள் நிறைவேற்றப்பட்டதற்கான வரம்பு எட்டப்பட்டுள்ளது என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர் பெயரிடும் மூன்று செயல்களும் ஆயுத மோதலின் போது சிறிலங்கா அரசபடைகள் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்த அதே செயல்கள் என்பது குறிப்பிடத்தக்கது:
ஒன்று, "குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது"
இரண்டு, "குழுவின் உறுப்பினர்களுக்கு கடுமையான உடல் அல்லது மனரீதியான தீங்கு விளைவிப்பது”
மூன்றாவது, “குழுவின் உடல் ரீதியான அழிவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்படுத்துவதற்காகக் திட்டமிடப்பட்ட வாழ்க்கை நிலைமைகளை வேண்டுமென்றே ஏற்படுத்துவது”
இதன் அடிப்படையில், சிறப்பு அறிக்கையாளர் அல்பானீஸ் தனது அறிக்கையில் - குறிப்பாக "ஒரு இனப்படுகொலையின் உடற்கூறியல்" என்று தலைப்பிடப்பட்ட தனது அறிக்கையினை பின்வருமாறு நிறைவு செய்கிறார்.“தாக்குதலின் மிகப்பெரிய தன்மை மற்றும் அளவு மற்றும் அது ஏற்படுத்திய அழிவுகரமான வாழ்க்கை நிலைமைகள், அந்தந்த பிரதேசத்தில் உள்ள மக்களை "ஒரு குழுவாக" உடல் ரீதியாக அழிக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன.”
இது பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் இனவழிப்பு நோக்கம் கொண்டவை என்பதனை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், எமது விடயத்தில் அப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் நடந்ததாக நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அங்கு இனவழிப்பு நடைபெற்றதாகக் குறிப்பிடப்படவில்லை.
அவ்வாறு கூறப்பட்டிருப்பின் இனவழிப்பு சாசனத்தின் பங்காளிகளான 163 நாடுகளும் அதற்கு சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்க வேண்டும் .
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா.பொதுச் செயலாளருக்கு இது குறித்து ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 2011 ஆம் ஆண்டு அனுப்பிய கடித த்தில், ஜ.நா. நிபுணர் குழு அறிக்கையில் இனவழிப்பு எனக் குற்றம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அறிக்கையில் இனவழிப்பு குற்றத்தின் கூறுகள் உள்ளன என்றும், இதனால் விசாரணைக்கு ஒரு சர்வதேச ஆணையத்தை நியமிக்குமாறும் கேட்டுக் கொண்டது.
சிறிலங்கா அரசு தமது இராணுவ நடவடிக்கைகள் "பயங்கரவாதத்திற்கு" எதிரானவை என்று கூறி இனவழிப்பை மறைக்க முயன்றது. இனவழிப்பை நிகழ்த்தியவர்களுக்கு இது புதிய ஒரு நியாயப்படுத்தல் அல்ல.
1919 இன். ஆர்மீனிய இனவழிப்புக் குறித்து ஒட்டோமான் பேரரசு/துருக்கி இவ்வாறே வாதிட்டது, இது பேரரசின் பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் ஆர்மீனிய எழுச்சிக்கு எதிரானது என்று அவர்கள் வாதிட்டனர்.
இதேபோல் 2002 இல் செர்பியா, கொசோவ இனவழிப்பைப் பொறுத்தவரை தமது நடவடிக்கை போராளிகளுக்கு எதிரானது; ஆனால் பொதுமக்களுக்கு எதிரானது அல்ல என்று வாதிட்டது.
சர்வதேச சக்திகள் சிறிலங்கா அரசு மேற்கொண்ட பொதுமக்களின் கொலைகளின் அளவை நன்கு அறிந்திருந்தன. உண்மையில் 2005 இல் கரத் எவன்ஸ் நடைபெறக்கூடிய அட்டூழியங்களுக்கு எதிராக முன்கூட்டியே எச்சரித்தார். R2P (பாதுகாக்கும் பொறுப்பு) ஐப் பயன்படுத்தி சர்வதேச சக்திகள் தலையிட அழைப்பு விடுத்தார். ஆனால், பிராந்தியத்தில் ஒரு புதிய அதிகார மையம் தோன்றுவதை அனுமதிக்கக் கூடாது என்ற அவர்களின் முடிவின் காரணமாக சர்வதேச சக்திகள் இதனைப் பொருட்படுத்தாது கண்மூடித்தனமாக இருந்தன.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து 16 ஆண்டுகள் ஆகின்றன, இதுவரை இனவழிப்பில் ஈடுபட்ட ஒரு நபர் கூட கைது செய்யப்படவில்லை; இனவழிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகவில்லை. சிறிலங்கா அரசு "இறையாண்மை" என்று முழக்கமிடுவதன் மூலமும் சீனாவின் ஆதரவுடனும் மனித உரிமைகள் கவுன்சிலில் உள்ள கணிசமான பகுதி நாடுகளை பொறுப்புக்கூறல் தொடர்பாக எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சமரசப்படுத்த முடிந்தது.
புவிசார் அரசியல் கூட்டமைப்பால் தாக்கத்தைக்கு உள்ளாக்கும் சக்திவாய்ந்த தாராளவாத நாடுகள் கூட பொறுப்புக்கூறல் தொடர்பாக அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கவில்லை. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் 9 அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களின் பயணத் தடை மற்றும் சொத்துக்களை முடக்கியுள்ளன. ரஷ்ய தன்னலக்குழுக்களைப் போலல்லாமல், சிறிலங்காவைச் சேர்ந்தவர்களுக்கு மேற்கத்திய நாடுகளில் எந்த சொத்துக்களும் இல்லை அல்லது விடுமுறைக்காக மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்யவில்லை. எனவே இந்த நடவடிக்கைகள் அர்த்தமற்றவை. இதேபோல், ஐ.நா. உயர் ஆணையர்கள் மற்றும் மேற்கத்திய அரசாங்கங்கள் சட்ட நடவடிக்கையை உலகளாவிய அதிகார வரம்பிற்குள் கொண்டுவர அழைப்பு விடுப்பதும் அர்த்தமற்றது, ஏனெனில் அந்தத் தலைவர்கள் வெளிநாட்டு நாட்டில் இருக்கும்போது மட்டுமே அந்த நடவடிக்கைகளைத் தொடர முடியும்.
உள்நாட்டு பொறிமுறை அல்லது கலப்பு பொறிமுறைக்கான மனித உரிமைகள் கவுன்சிலின் அழைப்பு அர்த்தமற்றது, ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே விசாரிப்பார்கள் என்று நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
சிங்கள அரசியல் ஒருபோதும் தமிழர்களைக் கொன்றதற்காக அதன் ஆயுதப் படைகள் விசாரிக்கப்படுவதை அனுமதிக்காது. மேலும், இனவழிப்புக் குற்றம் சிறிலங்காவின் தண்டனைச் சட்டத்தில் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2015 ஆம் ஆண்டில் அப்போதைய ஐ.நா. உயர் ஆணையர் அல் ஹுசைன் சிறிலங்கா அரசாங்கத்தை இனவழிப்புக் குற்றத்தை அவர்களின் தண்டனைச் சட்டத்தில் சேர்க்குமாறு அழைப்பு விடுத்தார். இருப்பினும் சிறிலங்கா அரசாங்கம் இவ் வேண்டுகோளைப் புறக்கணித்தது. சிறிலங்கா அரசு ஒருபோதும் அதைச் செய்யாது. அனைவரிடமிருந்தும் கடுமையான மற்றும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கான நேரம் இது. அரசியல் தீர்வை முன்னெடுப்பதற்கு இனவழிப்பு விடயத்தை நாம் போதுமான அளவு அறுவடை செய்யவில்லை/பயன்படுத்தவில்லை."
“ஐக்கிய ராஜ்ய”அல்லது கூட்டாட்சி பற்றிப் பேசுவதற்குப் பதிலாக இனவழிப்பை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் தீர்வுக்காக தாயகத் தமிழத் தலைமைகள் குரலெழுப்ப வேண்டும். தமிழ் அரசியல் தலைவர்கள் கடந்த 75 ஆண்டுகளாக கூட்டாட்சி பற்றிப் பேசி வருகின்றனர் எதுவும் நடக்கவில்லை; எதுவும் நடக்கப் போவதுமில்லை. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவழிப்பை சிறிலங்கா தண்டனைச் சட்டத்தில் ஒரு குற்றமாக அறிவிக்கும் சட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். இத்தகையதொரு சட்ட மூலத்தை முன்வைப்பதன் மூலம் உள்நாட்டு/சிங்கள அரசியலில் பொறுப்புக்கூறலை ஒரு பிரச்சினையாக மாற்ற முடியும்.
பிரித்தானிய தலைமையிலான மையக் குழு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிறிலங்கா அரசைப் பரிந்துரைக்கக் கோரும் ஒரு வரைவுத் தீர்மானத்தை வரும் செப்டம்பர் HRC அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும். இனவழிப்பு சாசனத்தில் 163 நாடுகள் கைச்சாத்திட்டு உள்ளன. குறைந்தபட்சம் ஒரு நாடு சர்வதேச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நாம் முனைப்புடன் செயற்படுவதுடன் பின்வரும் விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தாம் எதிர்கொண்ட கொடூரமான அனுபவம் அங்கிகரிக்கப் படவேண்டும் என்ற தேவையும் எதிர்பார்ப்பும் இருக்கும். இத்தகைய கொடூரமான மானுட விரோத நடவடிக்கைகளைத் தவிர்க்க, இவற்றைச் செய்தவர்கள் அதனை ஒப்புக்கொண்டு பொறுப்புக்கூற வைக்க வேண்டும்.
சிங்கள மேலாதிக்கவாதிகள்/இனவெறி கொள்கையாளர்கள் தமிழ் மக்கள் மனதில் ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு எதிராக வெறும் தார்மீக கண்டனம் மட்டும் போதாது. சட்டப்பூர்வமாக இனவழிப்பு சாசனத்தின் அடிப்படையில் இனவழிப்பு விசாரணையின் கீழ் இவர்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
இனவழிப்பை மறுப்பது இனவழிப்பின் இறுதிக் கட்டம் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். இனவழிப்பை மறுப்பது இறந்தவர்களையும் அவர்களின் நினைவையும் மீண்டும் மீண்டும் சொல்வதனையே நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடியது.
இனவழிப்புக்குத் தண்டனையின்மை எனும்.. சூழல் நிலவின் எதிர்கால இனவழிப்புக்கு அது வழிகோலும்.
இனவழிப்பை மறுப்பது வன்முறையை உடல்ரீதியாக இருந்து உளவியல் ரீதியாக விரிக்கிறது.
முள்ளிவாய்க்கால் இனவழிப்பைத் தடுக்க சர்வதேச சமூகம் தவறியதைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் அது குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைக்க வேண்டும்.
இனப்படுகொலையின் கொடூரங்கள் நீதித்துறை செயல்முறைக்கு மட்டுப்படுத்தப்படுத்த முடியாது என்பதையும் நாங்கள் அறிவோம். அப்படிச் செய்வது கொடூரங்கள்/துன்பங்கள்/சோகங்களை அற்பமாக்குவதாகும். பல நாடுகள் தமிழ் இனவழிப்புத் தொடர்பாக குறைவான தகவல்களையும் குறைவான ஈடுபாட்டையும் கொண்டவை என்பதையும், வலுவான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கு எதிராக அவற்றின் சொந்த உள்நாட்டு நிலைமைகளைக் கொண்டுள்ளன என்பதையும் நாங்கள் அறிவோம். சிறிலங்கா வேண்டுமென்றே LLRC, உண்மை மற்றும் மறுசீரமைப்பு ஆணையம் போன்ற அரை இணக்கமான நிறுவனங்களை உருவாக்குகிறது
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் பிரேரணையினை முன்னெடுக்கக் கூடிய ஒரு கூட்டணி உருவாகுவதைச் சீர்குலைக்கும் அதன் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இதனைச் செய்கிறது.
பர்மா மற்றும் சூடானுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தாலும், டார்ஃபர் மற்றும் ரோஹிங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதைத் தடுக்க சீனா வீட்டோவைப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை எடுத்தமையினையும் நாம் கவனத்திற் கொள்கிறோம். இதனைக் கருத்தில் கொள்கையில் எங்கள் கோரிக்கைகள் நடைமுறைச் சாத்திமற்றவை எள நாங்கள் கருதவில்லை. எங்கள் கோரிக்கைகள் நடைமுறைச் சாத்தியமற்றவை என்று கருதப்பட்டாலும், தமிழ் இனவழிப்புக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெறவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யவும், சர்வதேச நீதிமன்றத்தின் முன் சட்ட நடவடிக்கை எடுக்கவும் நாம் உரத்த குரலில் முன்வைக்கும் ஒருங்கிணைந்த கோரிக்கைகள், சிறிலங்காவை இவ்விடயத்தில் ஆதரிக்கும் மூன்றாம் தரப்பு நாடுகளின் நற்பெயருக்குப் பங்கம் விளைவிக்க உதவும் என நாங்கள் நம்புகிறோம்.
இறுதியாக தமிழ் இனவழிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
2015 இல் மனித உரிமைகள் சபையில் இழப்பீடு வழங்கக் கோரும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட நாங்கள் பண இழப்பீடு கேட்கவில்லை. நாங்கள் தார்மீக இழப்பீடு கோருகிறோம். அரசியல் இழப்பீடு வழங்கக் கோருகிறோம். இழப்பீடு வழங்குவதற்கான ஒரு வடிவமாக ஒரு சுதந்திர அரசை நாங்கள் அமைப்பதற்கு ஆதரவு தாருங்கள் என அழைப்பு விடுக்கிறோம். தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளாகாமல் பாதுகாப்பாக வாழ்வதனை இறைமையும் சுதந்திரமும் கொண்ட ஓர் அரசால் மட்டுமே உறுதி செய்ய முடியும்.
இனவழிப்புக்கு இனி ஒருபோதும் இடமேதும் இல்லை.
தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
LinkedIn
Facebook
Twitter